கடவுள்
எங்கே இருக்கிறார்? தூணிலும்
உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் கதையைக்
கூறுகிறோம். இதை இக்கால இரணியர்கள் ஏற்றுக் கொள்வார்களா? புராணங்களைப் புளுகு என்று தள்ளும் காலம் இது.
“தமிழா, தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது..... வேதங்களை
நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து
கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.
ஈசாவாஸ்ய
உபநிடதம் கூறும் ‘இந்த எல்லாமே
இறைவன் தான்’ என்ற கருத்தை
அதில் காண்கிறார்.
சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல்லென்று இரணியனும்
உறுமிக் கேட்க
நல்லதொரு மகன்
சொல்வான் தூணிலுள்ளான்
நாராயணன் துரும்பிலுள்ளான்
என்றான்
வல்லமைசேர் கடவுளில்லாப்
பொருளொன்றில்லை
மகாசக்தி இல்லாத
வஸ்து இல்லை
அல்லலில்லை அல்லலில்லை
அல்லலில்லை
அனைத்துமே தெய்வமென்றால்
அல்லலுண்டோ
கேளப்பா சீடனே
கழுதை ஒன்றை
கீழான பன்றியினைத்
தேளைக் கண்டு
தாளைப் பார்த்திருகரமும்
சிரமேற் கூப்பி
சங்கர சங்கர என்று
பணிதல் வேண்டும்
கூளத்தினை மலத்தினையும்
வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருனனைத்தின்
கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை
மட்டும் விரித்துச் சொல்வேன்
விண் மட்டும்
தெய்வமன்று மண்ணுமஃதே
யஜுர்
வேதத்தின் ருத்ரம் என்னும் பகுதி உபநிடத மகா வாக்கியங்களின் விளக்கமாக உள்ளது. இது
உலகம் முழுமையையும் ருத்திர வடிவமாக வணங்குகிறது.
மந்திரி,
வணிகர், தேரோட்டி, வேடர், கள்வர், விராதன், [ஒழுக்கக் கேட்டால் புறம் தள்ளப்பட்டவர்], தச்சர், குயவர்,
செம்படவர் என்று பல வடிவங்களில் விளங்கும் ருத்திரருக்கு வணக்கம் தெரிவிக்கும் அது,
சடைமுடியர், மொட்டைத் தலையர், நிற்பவர், நடப்பவர், தூங்குபவர், அருகில் இருப்பவர்,
தொலைவில் இருப்பவர் என்று எவரையும் மிச்சம் வைக்காமல் இறைவனாகக் கருதி வணங்குகிறது.
மனிதர் மட்டுமல்ல, நாய், குதிரை ஆகிய விலங்குகள் வடிவத்திலும் ருத்திரன் விளங்குவதாகக்
கூறப்படுகிறார். தேர், ஆற்று நீர், மரங்கள் போன்ற உயிரற்ற பொருள்களாகவும் அவர் இருக்கிறார்.
இந்த மனிதருக்குள்ளும், பிராணிகளிடத்திலும், பொருட்களுக்குள்ளும் ருத்திரன் வசிப்பதாகக்
கூறாமல் அவர்களே, அவையே ருத்திரன் என்று கூறுவது கவனிக்கத்தக்கது.
“நீயே கார்த்திகை
நட்சத்திரமாகவும் அக்னியாகவும் உள்ளாய். நீயே அக்னியின் சுவாலை, பிரஜாபதியின் ஒளி,
சோமரசத்தின் பிரகாசம். நீயே ரோகிணி நட்சத்திரமாகவும் பிரஜாபதியாகவும் உள்ளாய்.
நீயே ஆதிரை, நீயே ருத்திரன்,
நீயே புனர்வஸு, நீயே அதிதி,
நீயே பூசம், நீயே பிரகஸ்பதி,
நீயே ஆயில்யம், நீயே பாம்புகள், நீயே மகம், நீயே
பித்ருக்கள்...” என்று நீளும்
மற்றொரு யஜுர் வேதப் பகுதி [யஜுர் 4.4.10] விண்ணிலுள்ள
நட்சத்திரங்கள், தேவர்கள் எல்லாவற்றையும் ஒரு பரம்பொருளின் பல தோற்றங்களாகக் காண்கிறது.
இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு
பாடினார்.
சுத்த
அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த
மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம்
குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப்
புலையனுமஃதென்னும் வேதம்;
பித்தரே
அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது
மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த
நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந்
தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?
உயிர்களெல்லாம்
தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும்
பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர்
வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற
பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும்
இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப்
பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற
ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல்
தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
[பாரதி அறுபத்தாறு
15, 17, 18]
மனிதர்க்குக் கோபம் வருவதற்கான
காரணத்தை ஆராய்கிறார் பாரதி. நம்மைச் சூழ்ந்தது எல்லாம் கடவுள், நாமும் கடவுள் என்ற
எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்குமானால் நமக்குக் கோபம் வராது அல்லவா? நம்மிலும் வேறான ஒரு பொருளிடம் தானே நாம் கோபித்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு பொருள் எதுவும் இல்லை என்ற வேதக் கருத்தைச் சுருக்கமாக, மூன்று வார்த்தைகளில் தருகிறார்.
சூழ்ந்தது எல்லாம் கடவுள்.
சூழ்ந்ததெலாம்
கடவுள் எனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை
மறத்தலாலே
சேருவதே மானிடர்க்குச்
சினத்தீ நெஞ்சில்.
தன் வசன கவிதையில் பாரதி இக் கருத்தை மேலும் விளக்குகிறார்.
இவ்வுலகம் ஒன்று
ஆண், பெண், மனிதர்,
தேவர்,
பாம்பு, பறவை,
காற்று, கடல்,
உயிர், இறப்பு
இவை அனைத்தும் ஒன்றே
ஞாயிறு, வீட்டுச்
சுவர், ஈ, மலை, அருவி,
குழல், கோமேதகம்
இவ்வனைத்தும் ஒன்றே
இன்பம், துன்பம்,
பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன், புலவன்,
இரும்பு, வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம், கடல்மீன்,
புயற் காற்று, மல்லிகை மலர்
இவை ஒரு பொருளின்
பல தோற்றம்
உள்ளதெல்லாம்
ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின்
பெயர் - தான்
தானே தெய்வம்
தான் அமுதம் இறவாதது
பாரதி இக்கொள்கையைப் பின்பற்றினார்.
அத்வைத நிலையின் உச்ச கட்டத்தில் நின்று அவர் பாடுகிறார்.
காக்கைச் சிறகினிலே
நந்தாலா -நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே
நந்தலாலா
பார்க்கும் மரங்கள்
எல்லாம் நந்தலாலா- நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே
நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம்
நந்தலாலா- நின்றன்
கீதம் இசைக்குதடா
நந்தலாலா
தீக்குள் விரலை
வைத்தால் நந்தலாலா நின்னைத்
தீண்டுமின்பம்
தோன்றுதடா நந்தலாலா
உலகனைத்துமாக
வியாபித்து நிற்கும் பிரமம் நானே என்ற உபநிடதக் கருத்து எவ்வளவு எளிய சொற்களில் வெளிப்படுகிறது பாருங்கள்.
வானில்
பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில்
திரியும் மரமெல்லாம் நான்
கானிழல்
வளரும் மரமெலாம் நான்.
காற்றும்
புனலும் கடலுமே நான்,
விண்ணில்
தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட
வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில்
கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள
உயிரெலாம் நான்.
கம்பனிசைத்த
கவியெலாம் நான்,
காருகர்
தீட்டும் உருவெலாம் நான்,
இம்பர்
வியக்கின்ற மாட கூடம்
எழில்
நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை
மாதரிசையுளேன் நான்
இன்பத்
திரள்கள் அனைத்துமே நான்,
புன்னிசை
மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந்
துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்
கோடி இயக்குவோன் நான்
இயங்கு
பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங்
கோடி சமைத்துளேன் நான்,
சாத்திர
வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள்
யாவையும் ஆக்கினோன் நான்
அவை
பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்ட
பல சக்திக் கணமெலாம்நான்,
காரணமாகிக்
கதித்துளோன் நான்.
நானெனும்
பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச்
சுடர் வானில் செல்லுவோன் நான்,
ஆன
பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய்
விளங்கு முதற் சோதி நான்.
No comments:
Post a Comment