சில ஆண்டுகளுக்கு
முன்பு, அற்புதம் விளைவிக்கும் அதிசய மூலிகைகள் என்ற தலைப்பில் தாவர இயல்
பேராசிரியர் திரு பாலு என்பவர் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தில் நிகழ்த்திய
உரையிலிருந்து சில பகுதிகள். கீழ்க் கண்டவற்றில் *குறியிட்டவை அவர் செயல் முறை
விளக்கத்துடன் காட்டியவை.
*நார்த்தாமலையில்
கிடைக்கும் ஒரு அரிய மரத்தின் இலை புறாத் தழை. இதில் ஒன்றை எடுத்துக் கசக்கிப்
பிழிந்து அந்தச் சாற்றை பாலில் விட்டால் அது உடனே
தயிர் ஆகிவிடும்.
*கட்டுக் கொடி என்று
ஒரு மூலிகை. இதில் 3 வகை உண்டு. ஒன்று விஷமுடையது. மற்ற இரண்டுக்கும் ஒரு குணம்
உண்டு. இதைப் பிழிந்து வரும் சாற்றைத் தண்ணீரில் கலந்தால் தண்ணீர் அல்வா போல,
கெட்டியாகவும் இனிப்புச் சுவையுள்ளதாகவும் மாறும்.
சதுரக் கள்ளி என்றொரு
செடி. இதன் பாலை ஈர அரிசியுடன் கலந்து வைத்தால் அரிசி வெந்து சாதமாகிவிடும். ஆனால்
இது உண்பதற்கு உரியது அல்ல.
நீரைக் கொண்டு
விளக்கு எரிக்க முடியுமா? சித்தர்கள் செய்வதாகச் சொல்கிறார்கள். நாமும்
சித்தராகலாம். சதுரக் கள்ளிப் பால், அத்திப் பால், ஆலம்பால் இவற்றில் ஒன்றை
நீருடன் கலந்து திரியிட்டுக் கொளுத்தினால் விளக்கு எரியும்.
*தேத்தாங்கொட்டையை
அறைத்துத் தண்ணீரில் கலக்கினால் தண்ணீரில் உள்ள அசுத்தங்கள் அடியில் தங்கி விடும்.
அதிகமாகச் சேர்த்தால் தண்ணீரின் நிறம் பால் போல மாறிவிடும். வெய்யிலில் வைத்தால்
மீண்டும் இயற்கை நிறம் வரும்.
*தாமரை விதையைப் பொடி
செய்து பாலில் கலக்கினால் தண்ணீர் போல ஆகிவிடும். வெய்யிலில் வைத்தால் இயற்கை
நிறம் வரும். அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரிப்பதாகச் சொல்லப்படுவதற்கும்
இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ?
*அவல் வாயில்
போட்டவுடன் ஊறிக் கரைந்து விடுகிறது அல்லவா? நெய்யுடன் கலந்து உண்டு பாருங்கள். லேசில்
கரையாது.
*மணலைக் கயிறாகத்
திரிக்க முடியுமா? முடியும் என்கிறார் திரு பாலு. நீர்முள்ளி விதைப் பொடியைத்
திருநீற்றுடன் கலந்து அதைக் கொண்டு ஈர மணலைக் கயிறாகத் திரிக்கலாம்.
*இதே பொடியைக் கொண்டு
நீரில் கரைந்த மஞ்சள் பொடியை மீண்டும் திரட்டி உருட்ட முடியும்.
இந்தப் பொடியை ஒரு
முறை உண்டால் ஒரு மாதத்திற்கு பசிப்பிணி இல்லாமல் வாழமுடியும்.
*சிறுகண்பூளை,
நத்தைசூரி, நாயுருவி இவற்றில் ஒன்றை வாயிலிட்டு நன்றாக மென்றபின் பானை ஓடு,
கண்ணாடி போன்றவற்றைப் பல்லால் கடித்து அரைக்கலாம். வாயில் ரத்தம் வராது.
*நத்தைசூரியை
மென்றுகொண்டே கண்ணில் மணலைக் கொட்டிக் கொண்டால் கண்ணில் எந்தவித உறுத்தலும் இராது.
கோபுரம் தாங்கி,
விழுதி இலை, திருநீற்றுப் பச்சிலை இவை மூன்றையும் அல்லது இவற்றில் ஒன்றை இடுப்பில்
கட்டிக் கொண்டால் அதிக சுமை தூக்க முடியும். அதி வேகமாக ஓடவும் வலிமை கிடைக்கும்.
சோற்றுக் கற்றாழையின்
சோறு, வெங்காயச் சாறு, விளக்கெண்ணெய் இவற்றைச் சம அளவு கலந்து கையில் தடவிக்
கொண்டு பழுக்கக் காய்ந்த இரும்பைத் தொடலாம்.
No comments:
Post a Comment