Pages

Tuesday, June 22, 2010

புரிந்துகொள்ளல்


                      
       ஒரு  குழந்தைக்கு  நாம்  ஒரு  கதையைச்  சொல்லிவிட்டால்  அது  அந்தக்  கதையைத்   திரும்பத் திரும்பச்  சொல்லச்   சொல்லிக்  கேட்டு  ஆனந்தப் படுகிறது. எத்தனை  முறை  கேட்டாலும் அதற்கு அலுப்பதில்லை. சொல்பவருக்கு  அலுத்துவிடும்; ஆனால்  குழந்தை  அதை   மீண்டும்  கேட்கவே விரும்புகிறது.

            அதே போல, குழந்தைக்கு  ஏதேனும்   ஒரு  சொல்  அல்லது  சொல்தொடர்   மனதில் பதிந்துவிட்டால்  அதைத்   திரும்பத்   திரும்பச்   சொல்லிக்  கொள்கிறது. எத்தனை  முறை  தான் அலுக்காமல்  சொல்கிறது  என்று  நாம்  ஆச்சரியப்படுகிறோம்.

            குரங்கையோ   நாயையோ   பூனையையோ  பார்த்தால்  மணிக்கணக்கில்  பார்த்துப்  பார்த்து  ரசித்துக் கொண்டிருப்பது   குழந்தையின்  இயல்பு. ஒரேவிஷயத்தைத்  திரும்பத்  திரும்பப்   பார்ப்பதிலும்   கேட்பதிலும்  சொல்வதிலும்   அது  மகிழ்ச்சி  கொள்கிறது.

            வயதாக  வயதாக      நாம்   இழந்துவிடும்   இந்தப்  பண்பை  மேலும்  சற்று  ஆராய்வோம்.   குழந்தை   முதன்  முதலாக  ஒரு   கதையைக்  கேட்கும்போது  அதற்கு  ஒன்றும்  புரிவதில்லைபுரியவில்லை  என்று  சொல்லத்  தெரியாவிட்டாலும்  அது  கதை  கேட்பதில்  ஆர்வம்  காட்டுகிறதுஉதாரணமாக, ஒரு  மூன்று  வயதுக்  குழந்தைக்கு, காக்கா & நரி  கதை  சொல்வதாக  வைத்துக்  கொள்வோம்அது  காக்கையை  வேண்டுமானால்  பார்த்திருக்கக்  கூடும்.   நரி  பற்றி  அதற்குத்  தெரியாதுநரி  என்றால்  ஒரு  பிராணியா    ஜடப் பொருளா  அல்லது  தின்பண்டமா  என்ற  விபரத்தைத்    தெரிந்து  கொண்டு  தான்  மேற்கொண்டு  கதை  கேட்பேன்  என்று  அது  சொல்வதில்லைகாக்கை  பாடியதும்  வடை  கீழே விழுந்தது   என்று  நாம்  சொல்வதை  அது  அப்படியே  கேட்டுக் கொள்கிறதே  தவிர  பாடினால்  எப்படி   வடை  விழும்   என்பதெல்லாம்  அதற்குத்  தெரியாதுஆயினும்  கதையில்  ஆர்வம்  காட்டித்  திரும்பத்  திரும்பக்   கேட்பதன்  மூலம்  புரிந்து  கொள்ள முயலுகிறதுபல  முறை  கேட்டபின்  அதற்குக்  கதையின்  ஒரு  அம்சம்  மட்டும்  புரியலாம்முழுக்  கதையும்  புரிவதற்கு  அதற்குப்  பல  வருடங்கள்  கூட  ஆகலாம்அதுவரை  குழந்தைக்குக்  கதை  மேல்  ஆர்வம்  குறைவதில்லை.  
           
            இதில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய கருத்து ஒன்று உள்ளது.   வயதான   நமக்கும்  எந்த  விஷயமும்  புரிந்து கொள்ளும் வரை  கவர்ச்சிகரமாக உள்ளதுபுரிந்து  கொண்டபின்  அல்லது நாம்  புரிந்கொண்டதாக  நினைத்துக்கொள்ளும்போது    நமக்கு அதில் அலுப்பு ஏற்படுகிறது
           
            எத்தனையோ   முறை ராமாயணக்கதை கேட்டிருக்கிறோம்அலுப்பதில்லை, ஏன்அதை  நாம் முற்றிலுமாகப்  புரிந்து கொள்ளவில்லை என்பதை  உணருகிறோம்

            அவ்வளவு  பெரிய  தசரதச்  சக்ரவர்த்தி,   ஒரு நாட்டை  ஆளும் நிர்வாகத்  திறன்   பெற்றவர்ஆராயாமல்  மனைவிக்குச்  சத்தியம்  செய்து கொடுத்தது ஏன்?  

            ராமன்  மேல்  அளவு கடந்த  பாசத்தைக்  கொட்டிய  கைகேயி   கண  நேரத்தில் மந்தரையின்  மந்திரத்துக்கு  மசிந்தது   ஏன்

            அறத்தின்  நாயகனான  ராமன்  வாலியை  மறைந்திருந்து கொன்றது  ஏன்?

            தவ  வலிமையும்  தோள்  வலிமையும்   கல்வி  நலனும்  பெற்ற  ராவணன்    தனக்குத்  தகாது  என்று  தெரிந்தும்  சீதையைச்  சிறை  பிடித்தது  ஏன்

            இது போன்ற  எத்தனையோ  ஏன்கள்  நம்  உள்ளத்தில்  விடை  காணப்படாமல்  இருக்கும்  வரை  நாம்  தொடர்ந்து  ராமாயணம்  கேட்போம். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது  என்று  நினைப்பவர்கள், என்ன  இருக்கு ராமாயணத்தில்திரும்பத்  திரும்ப   அதே  கதை  தானே  என்பார்கள் .   

            வாழ்க்கைப்  பிரச்சினைகளிலும்  இதே  போன்ற  அணுகுமுறையைக்  காணலாம்வாழ்க்கைப்  பிரச்சினைகளை  உற்றுப்  பார்த்து  அதைப்  புரிந்து  கொள்ள  நினைப்பவர்களுக்கு  வாழ்க்கை  ஒரு  சுவையான  விஷயம்.
 
            உணவுக்காக    உழைப்பதும்   உண்டு  உண்டு  உறங்குவதும்  தான்  வாழ்க்கை  என்று   அதை ஒரு  எளிய  பார்முலாவாக  ஆக்கிக்  கொள்பவர்களுக்கு   இது  ஒரு  சுமை, அலுப்பு, துன்பம்

            குழந்தைகள்  போல்  கள்ளமற்ற  மகிழ்ச்சி    நம்     வாழ் நாள்    முழுவதும்  நீடித்து  நிற்கச்  செய்ய  முடியும்.  

Monday, June 14, 2010

Rtam and Satyam

                When we look at the translation of Rik Veda , we come across the word rtam, vrata and dharma all translated as Holy Law, Eternal law or Law for about 350 times and one is led to believe that rtam is the central idea of the Vedas.

                All devas [agni, vayu, indra varuna etc.] are said to be born of rtam. These devas are said to be the strengtheners and protectors of rtam.

                What is meant by rtam which gives birth to the devas and is maintained by them?
Rig vedic hymns say that Varuna is the king of rtam and he decides the routes of the sun, the dawn, the moon, the stars, the wind, the birds and the ships. Indra, another protector of rtam decides the course of the rivers and the growth of plants.  From these it can be inferred that rtam denotes the laws of nature. Every object in the universe has its own property (or own course of movement) and one supreme command coordinates all these. This supreme law is called rtam.

                Rig vedic hymns speak of different gods like Indra, Varuna etc. but they do not mention of one Omnipotent God. Rtam is called the all powerful. The Devas, who are said to be the protectors of rtam are themselves the offspring of rtam. Hence it may be said that the concept of the Omnipotent, Omnipresent and omniscient God was evolved from rtam.

                The natural forces that work according to rtam are called Devas. Though this word refers to all the Devas, the word Savita is always preceded by the attribute Deva in Rig veda . So it can be inferred that Savita (the sun) was the first natural object to attract the attention of the sages. The word Deva is derived from the Sanskrit root ‘Div’ meaning light. Originally it might have referred to only luminous objects like sun, moon, stars, fire etc. But later, it came to include all the natural forces with or without light, visible or invisible such as Vayu.

                [Rtam and its Sanskrit synonyms Dharma, Vratha are variously translated in Griffith’s work as law, natural law, holy law, true law, order, holy order, eternal order, orderliness, truth, highest truth, eternal truth, sacred truth, righteousness, right ways, sacred duty, Genuine. ]

                The sage wonders what his role is in the vast universe. What is the relationship between me and the universe? One day he gets the first glimpse of the concept of rtam. He understands that he is a speck in the vastness. He could only bow before the Great Truth with a hymn.

1.164.37
What thing I truly am I know not clearly: mysterious, fettered in my mind I wander. When the first-born of holy law approached me, then of this speech I first obtain a portion.

Vedic Rishis did not hit upon the concept of rtam all on a sudden. They came to know of it gradually.

1.106.3 Two Mothers of the Gods strengthen Law.

5.5.6 Fair strengtheners of vital power, young Mothers of eternal law,
Morning and Night we supplicate.


                We learn that the occurrence of day and night alternately was the first thing in the natural order that caught the attention of the sages.

10.190
1. FROM Fervour kindled to its height Eternal law and truth were born:
Thence was the Night produced, and thence the billowy flood of sea arose.
2 From that same billowy flood of sea the Year was afterwards produced,
Ordainer of the days nights, Lord over all who close the eye.
3 Dhatar, the great Creator, then formed in due order Sun and Moon.
He formed in order Heaven and Earth, the regions of the air, and light.

                It is improbable that after the creation of day and night, Brahma crated the sun. Hence it should not be taken literally but should be interpreted as follows.

                The sages performed Tapas ( thinking and research) intensely. They came to know of Rtam and Satyam. The occurrence of night attracted their attention first. They realized that the cycle of day and night was caused by the sun. Then they observed the sea and noted its changes over a period of time. They found the same kind of seasons repeating in the same order and called them ‘rtu’s and the period of one cycle of rtus as year. Then they correlated the movements of sun and moon. Thus they gained the knowledge of the sky, the earth and the atmosphere.

                Rtam does not mean the truth as we understand it today. It denotes the orderliness which regulates the movements of the sun, earth, moon etc. It denotes the laws of nature. The question whether the sun moves or the earth moves does not arise here.The planets have their own orbit and their revolutions are governed by some laws though we have not understood them all. The vedic sage calls the orderliness by the name rtam.

                Thinking along the lines of the rishi, we can extend it as follows. Every object has its own properties. No two objects are similar. Among the living beings, no two species are identical. Within the species, no two animals, say men, are similar in appearance, ability etc. The living beings feed upon one another and no species becomes extinct because of this feeding. There is attraction between certain objects and repulsion between certain others. Changes keep on occurring and the old state never returns. There are endless varieties both horizontally and vertically. The law that governs all these is called rtam.

                It was in such a mood that the rishi moans the disappearance of the old rtam and asks whether the Devas, the protectors have failed in their duty.

Rik 1.105
4 I ask the last of sacrifice. As envoy he shall tell it forth.
Where is the ancient law divine? Who is its new diffuser now? Mark this my woe, ye Earth and Heaven.
5 Ye Gods who yonder have your home in the three lucid realms of heaven,
What count ye truth and what untruth? Where is mine ancient call on you? Mark this my woe, ye Earth and Heaven.
6 What is your firm support of law? What Varuna's observant eye?
How may we pass the wicked on the path of mighty Aryaman? Mark this my woe, ye Earth and Heaven.

                Later he realizes that rtam is never destroyed or defeated. There are many parts of rtam which remain hidden to us. We learn them one by one. This ‘gnanodayam’ flashes in his mind and he welcomes the new dimension as the birth of a new rtam.. The following verse of the same sooktam tells this.

15 Varuna makes the holy prayer. To him who finds the path we pray.
He in the heart reveals his thought. Let sacred worship (rtam) rise anew. Mark this my woe, ye Earth and Heaven.


                This is the age of science and we often boast that man has conquered nature or has learnt to circumvent the laws of nature. But remember that rtam (laws of nature) is infinite and we have known only a fragment of it. The materials to circumvent the laws of nature are also provided by another set of natural laws.

                For example, mercury is a known poison. If it is purified with the juices of some herbs, it becomes a life-saving drug. Has rtam been defeated? No. The herbs that make mercury non-poisonous are also a part of the law of nature.

                An object thrown up is bound to fall down. This is rtam. Now we know that if an object is sent up at a given speed and to a certain height, it will not fall down. Has man conquered nature? No. He has learnt a new dimension of the laws which overrides the known law.

Rik 1.152.
3 The Footless Maid precedeth footed creatures. Who marketh, Mitra-Varuna, this your doing?
The Babe Unborn supporteth this world's burthen, fuIfilleth law and overcometh falsehood.

                The theory of evolution is spoken of in the first line. Darwin says that the footless creatures like fish preceded the amphibians like frogs. This Rik verse tells that the evolution is caused by rtam, which remains invisible like a baby in the womb. Though unseen, it sees to the proper evolution of the world and does not brook any disorderliness.

Rtam and men

1.151.4 ye, Righteous Ones, proclaim aloud the Holy law. That efficacious power that comes from lofty heaven, ye bind unto the work, as to the pole an ox.
1.163. 5 Here, Courser, are the places where they groomed thee, here are the traces of thy hoofs as winner. Here have I seen the auspicious reins that guide thee, which those who guard the holy law keep safely.
1.130.8 Indra in battles help his Aryan worshipper, he who hath hundred helps at hand in every fray, in frays that win the light of heaven. Plaguing the lawless.
1.41.4 Thornless, Adityas, is the path, easy for him who seeks the law:
10.85.1. Truth is the base that bears the earth; by Surya are the heavens sustained.
By law the Adityas stand secure, and Soma holds his place in heaven.
7.76.4 They were the Gods' companions at the banquet, the ancient sages true to law Eternal.
8.31.13 The paths of law are fair to tread.


                From the above we come to know that the vedic injunction for men is to abide by rtam and this path is easy to tread, Those who follow rtam are rewarded with Amrtam. Others get punishment.

                What is ‘Amrtam’? The puranas say that it is a drink which makes one immortal. But as we understand the laws of nature today, immortality is impossible. I would like to interpret it as what J.K. termed as timeless living, and living from moment to moment. This is attained by meditation, that is, commentless observation. Bharathi says that the immortal state is attained by freeing ourselves from worries, anger, falsehood, fear and desires.

1.25.1 I WHATEVER law of thine, O God, O Varurna, as we are men,
Day after day we violate.
2 give us not as a prey to death, to be destroyed by thee in wrath,
To thy fierce anger when displeased.
1.51..8 Discern thou well Aryas and Dasyus; punishing the lawless give them up to him whose grass is strewn.


                From the above it is learnt that man violates the rtam and hence he is punished with death. What does it mean to abide by rtam? Just observe nature. Understand that there is orderliness in every natural phenomenon. Probe deeper and you will find that there is something (called satyam) behind all these laws of nature. Meditate on rtam and satyam.

                But man has mind. He is controlled by ego. He thinks that he can manipulate nature. Sometimes he succeeds. But sometimes, despite his clever planning, he fails and does not know the causes for his failure. He just names it fate.

                Now we will see what Rig Veda says about Satyam. In some of the verses (1.108.1, 1.127.8, 2.15.1, 3.54.4, 6.30.4) satyam is used as a synonym for truth. In some other verses, (1.1.5, 1.1.6, 1.12.7, 6.51.10, 8.59.5, 8.61.4) it is used in a more extended sense. Agni, Varuna and Indra are described as satyam, their blessings are satyam and their ways are satyam.

                Indra is said to be born of rtam in one verse and of satyam in another. So we can presume that rtam and satyam are one and the same. Since we have already seen that the concept of rtam evolved into that of one Almighty God, we can assume that satyam is also not different from God.

                1.164.46 says that what exists is one and the sages call it differently. The word used for ‘exists’ is ‘sat’ from which satyam is derived. This is the basic tenet of the Vedas and it gave rise to different forms of worship in Hinduism later and everything was accepted by the Vedas. This is also the cause for the tolerance of Hinduism. We accommodated other religions because we know that what exists is one though called differently. Vedas do not call the people with different ideology as fools but regard them all as sages.
The word satyam is derived from ‘sat’
सत् which is the present participle of अस् = to be. Satyam therefore means that which exists. The Tamil word for satyam is ‘unmai’ which is derived from ‘ullathu’ which has no past and future forms. It denotes all the three tenses- past, present and future. What is it that exists for ever? It is called God. So satyam refers to God

                There is the Upanishadic statement, “Satyameva Jayate, na anrtam”. We have all along understood it to mean that the truth will win some day in the future. Properly speaking, Satyam (God) keeps winning always. This is borne out by the word ‘jayate’ which is in the present tense and denotes the habitual, permanent, recurring actions. So it means, “God alone triumphs and anything against the laws of nature does not succeed.”

                Though all the devas are considered embodiment of satyam, the sun has a special relationship with it. We have already seen that only ‘Savita’ is always preceded by the attribute ‘Deva’ .

10.55. 6 Strong is the Red Bird (sun) in his strength, great Hero, who from of old hath had no nest to dwell in.
That which he knows is truth and never idle: he wins and gives the wealth desired of many.


                The sun’s chariot has two wheels- one is rtam and the other satyam. Only those who have understood the concept of rtam well can realize the existence of an almighty satyam.

10.85.16 The Brahmans, by their seasons, know, O Surya, those two wheels of thine:
One kept concealed, those only who are skilled in highest truths (rtam) have learned.
4.51.7 Blest were these Dawns of old, shining with succour, true with the truth (satyam) that springs from holy Order. (rtam)
7.56.12 By law (rtam) they came to truth (satyam).


                In 10.36.13. the sun is called the father of satyam, implying that satyam was reached by the sage through observing the sun.  Each vedic god has his/her own significance. While Varuna is considered the king of devas, Indra is considered supreme and the mightiest. It was Indra who raised the Sun high so that he (the sun ) can see the wide world. The prayer for the sun (savita) is the famous gayatri which forms a part of the veda and is cherished till today. Among the devas created by rtam, Surya occupies a place of importance. One can learn about rtam and satyam easily by observing the sun. Actually these devas are not separate entities but different aspects of one satyam. The antonym of both rtam and satyam is anrtam. In the vedic literature, One does not come across the word asatyam. When one acts or talks against the laws of nature, that is anrtam. Veda says that gods punish anrtam.

                Since we have seen that satyam refers to the supreme power which expresses itself through the laws of nature, the word asatyam means, ‘no supreme power’. Nobody in his senses will say that. Even the atheists accept the existence of one superhuman power and call it nature. They only deny the need to worship it. Hence no such word as ‘asatyam’ in the Vedas.

                We have already seen the Upanishadic statement, Satyameva Jayate, na anrtam. There is a popular sloka, perhaps from Mahabharata. It says, ‘Speak satyam, speak priyam. Never speak satyam which is apriyam. Never speak priyam which is anrtam.’ Note, here also the antonym for satyam is anrtam and not asatyam.

                We have seen so far that all the ideas have been encrypted into symbols in the Vedas. In tune with this system, we have to understand the word ‘parishinchaami’ (drench) also to mean, to mix, unite, take together.

                I drench satyam with rtam should mean, ‘I take satyam and rtam together in my mind.’ In other words, at every meals-time, we remind it to ourselves that we have to observe the nature, understand that there is orderliness in everything and behind all these there exists one, the unconquerable satyam. Let us admire the greatness of rtam and dissolve ourselves into the silence of satyam.

Saturday, June 12, 2010

ஸத்யமும் ருதமும்

                பரிஷேசன மந்திரத்தில் 'ஸத்யம் த்வர்த்தேன (பதம் பிரித்தால்- த்வா ருதேன) பரிஷிஞ்சாமி' என்று வருகிறது. இதன் பொருள் 'ஸத்யமே உன்னை ருதத்தால் நனைக்கிறேன்' என்பது. இரவில் இதை மாற்றி 'ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி' என்கிறோம். அதாவது, 'ருதமே உன்னை ஸத்யத்தால் நனைக்கிறேன்' என்கிறோம். இந்த ருதம் ஸத்யம் என்பது என்ன? இது நனைக்கக் கூடிய திரவமா? இல்லை எனில், நனைப்பது என்பது எதைக் குறிக்கிறது என்று சிந்திப்போம்.

               
நடைமுறையில் இந்த இரண்டு சொற்களுக்கும் உண்மை என்றே பொருள் சொல்லப்படுகிறது.
ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்
ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்மஸ் ஸநாதன:
என்ற ஒரு ப்ரஸித்தமான ச்லோகம் உள்ளது. 'ஸத்யத்தைப் பேசுக, ப்ரியத்தைப் பேசுக, ஸத்யமாயினும் அப்ரியத்தைப் பேசாதே. ப்ரியமாயினும் அன்ருதம் பேசாதே' என்பது இதன் பொருள்.

               
இந்த ச்லோகத்தில் ஸத்யத்திற்கு எதிர்மறையாக அஸத்யம் என்று கூறாமல் ருதத்தின் எதிர்மறையான அன்ருதம் என்ற சொல்லைக் கூறியிருப்பதால் ஸத்யம் ருதம் என்ற இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

               
ஒன்றை மற்றொன்றால் நனைக்கிறேன் என்பதால் அவை வேறு வேறு பொருள்கள் தான் என்பது உறுதியாகிறது. மேலும் வேதத்தில் ருதம் வரும் இடங்களில் எல்லாம் ஸத்யமும் கூடவே வருகிறது. ருதம் வதிஷ்யாமி, ஸத்யம் வதிஷ்யாமி என்றும், ருதம் அவாதிஷம், ஸத்யம் அவாதிஷம் என்றும் ருதம் ஸத்யம் பரம் ப்ரம்ம என்றும் அடுத்தடுத்து வருவதால் அது கூறியது கூறலாக இராது, வேறு வேறு பொருள் கொண்டவை தான் என்பது தெரிகிறது.
               
                ரிக் வேத மொழிபெயர்ப்புகளைப் பார்த்தால், வேதத்தின் அடிப்படைக் கருத்தே ருதம் தானோ என்று நினைக்கும் அளவுக்கு இந்த ருதம் என்ற சொல்லும் இதே பொருளில் வ்ரதம், தர்மம் என்ற சொற்களும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. (சுமார் 350 தடவைகள்)

               
எல்லாத் தேவர்களும் ருதத்திலிருந்து தோன்றியவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ரிக் வேதம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தேவர்களை ருதத்தின் பிள்ளையாகக் கூறுகிறது.

(
எண்கள் முறையே மண்டலம், சூக்தம், சுலோகங்களைக் குறிக்கும்.)

1.65.2
சோமன் ருதத்திலிருந்து தோன்றியவன்
1.70.1
அக்னி ருதத்தின் மகன்
1.113.12
உஷா ருதத்தில் தோன்றியவள்.
2.23.15
பிரஹஸ்பதி ருதத்தின் மகன்
5.61.14
மருத்துகள் (காற்றுகள்) ருதத்தின் மக்கள்
7.66.10
மித்ரன் (சூரியன்), வருணன் அர்யமான் ருதத்தின் மக்கள்
8.6.2
இந்திரன் ருதத்தின் மகன்

கீழ்க்கண்டோர் ருதத்தைக் காப்பாற்றி வலுப்படுத்துபவர்களாகக் கூறப்படுகிறார்கள்-

1.14.7
விஸ்வே தேவர்கள்
1.23.5
மித்ரன், வருணன்.
1.90.2
வருணன், மித்ரன், அர்யமான்
1.101.3
வருணன், சூர்யன்
2.29.1
விஸ்வே தேவர்கள், ஆதித்யர்கள்
3.10.2
அக்னி
10.25.3
சோமன்
1.47.1
அஸ்வினி தேவர்கள்

               
எனவே தேவர்களின் பிறப்புக்கும் காரணமாகி, தேவர்களால் நிலைநிறுத்தப்படுவதும் ஆகிறது ருதம்.

ருதம் என்பது என்ன?

               
அரசன் வருணன் சூரியனுக்கு பாதையை ஏற்படுத்துகிறான். இரவில் ஒளிரும் நட்சத்திரங்கள் பகலில் எங்கு போய்விடுகின்றன? இரவில் சந்திரன் பெருமையுடன் உலா வருகிறது. வருணனின் விரதங்கள் வலுவிழப்பதில்லை என்று ரிக் 1.24.8 சொல்வதால் சூரிய சந்திரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட நியதிப்படி காலம் தவறாமல் உலகைச் சுற்றி வருவதைத் தான் ருதம் விரதம் என்ற சொற்கள் குறிப்பதாக அறிய முடிகிறது.

ரிக் 1.123.9- உஷா (விடியற்காலை) ருதத்தை மீறுவதில்லை. குறிப்பிட்ட இடத்திற்கு நாள் தோறும் வருகிறாள்.

ரிக் 1.25.7- வருணன் பறவைகளின் பாதைகளை அறிந்துள்ளான். கடலில் இருக்கும் கப்பல்களையும் அறிந்துள்ளான். தன் ருதத்தின்படி காற்றின் திசைகளை அவன் அறிவான்.

ரிக் 1.101.3- இந்திரன் ருதம் கொண்டு நதிகளை விரியச் செய்தான். தாவரங்களை உண்டாக்கினான்.

               
மேற்கண்ட கூற்றுகளிலிருந்து ருதம் என்பது என்ன என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது. இயற்கையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனி இயல்பு இருக்கிறது. சூரியன் வெப்பம் தருகிறது. நாள் தவறாமல் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. சந்திரன் இரவில் குளுமையான ஒளி தந்து, தனக்கென்று விதிக்கப்பட்ட கால அளவுப்படி தேய்தலும் வளர்தலுமான நியதியை பின்பற்றுகிறது. நட்சத்திரங்கள் இரவில் மட்டும் ஒளிர்கின்றன. காற்று, வெப்பம் குறைந்த இடத்திலிருந்து வெப்பம் மிகுந்த இடம் நோக்கி வீசுகிறது. நீர் மேட்டிலிருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது. தீ சுடுகிறது. மண்ணில் விழுந்த விதை முளைக்கிறது. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான இயல்பு ஏற்படுத்தி அனைத்தையும் தன் ஆளுகைக்குக் கீழ் கட்டுப்படுத்தி ஒருங்கிணைத்து வைத்துள்ளது ஒரு பெரும் நியதி. இந்த நியதியைத் தான் வேதம் ருதம் என்கிறது. அதை நாம் இன்றைய மொழியில் இயற்கை விதி என்று அழைக்கிறோம்.

ருதம் தான் இறைவன்       

                ரிக் ஸம்ஹிதையில் தேவர்கள் தாம் துதிக்கப்படுகிறார்கள். தேவர்களுக்குத் தலைவனான முழு முதல் இறைவனைக் குறிக்கும் ஈச்வரன், பகவான், தேவதேவன், மஹாதேவன் ஆகிய சொற்கள் காணப்படவில்லை. தேவர்களைப் பிறப்பிப்பதும் ருதம் தான். தேவர்களின் அரசனாகவும் ருதத்தின் பெருங் காவலனாகவும் கூறப்பட்டுள்ள வருணனும் அந்த ருதத்தால் தோற்றுவிக்கப்பட்டவன் தான். எனவே ருதம் தான் பிற்காலத்தில் இறைவன் என்ற பெயர் அளிக்கப்படுகிறது என்பதை அறியலாம்.

               
இந்த விதியின்படி செயல்படும் இயற்கைச் சக்திகளை வேதம் பொதுவாக தேவர்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது. தேவஎன்ற அடைமொழி மற்றவர்களை விட ஸவிதாவுக்குத் தான் மிக அதிகமாகக் கொடுக்கப் பட்டிருப்பதிலிருந்து ஸவிதா எனப்படும் சூரியன் தான் வேத ரிஷிகளின் கவனத்தைக் கவர்ந்த முதல் தேவன் என்பதை ஊகிக்கலாம். ஒளி என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து பிறந்த தேவ என்ற சொல் பிற்காலத்தில் பொருள் விரிவு பெற்று ஒளியுள்ள சூரிய சந்திரர்களையும் அக்னியையும் மட்டும் குறிக்காமல் கண்ணால் காண முடியாத வாயு முதலானவர்களையும் குறிக்கிறது.

ருதத்தின் பரிமாணம்         
      இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் தன் பங்கு என்ன என்ற கேள்வி வேத முனிவருக்கு எழுகிறது. இந்த உலகத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் யார் என்று அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஒரு நாள் அவருக்கு உண்மையின் காட்சி தெரிகிறது. அப்பொழுது அவருக்கு மனதில் ருதம் என்ற கருத்துரு தோன்றுகிறது. இந்த பெரும் இயற்கை நெறியில் தானும் ஒரு துகள் என்பதை உணர்கிறார். அந்த மகாசக்தியின் முன் தலை வணங்கிப் பணிதலைத் தவிர வேறு ஒன்றும் அவருக்குத் தெரியவில்லை. தன்னுடைய மனதில் தோன்றியதை அவர் பாடலாக்கி நமக்குத் தருகிறார்.

1.164.37-
நான் யார்? எனக்கு தெரியவில்லை. மனம் அலைந்து கொண்டிருந்தது. ருதத்தின் தலைமகன் என்னை நெருங்கினான். அப்பொழுது இந்த சொல்லின் ஒரு பகுதியை நான் அடைந்தேன்.
எப்படி அறிந்தனர்?               
                முனிவர்களுக்கு ருதம் பற்றிய அறிவு உடனடியாகத் தோன்றி விடவில்லை. படிப்படியாகத் தான் ஏற்பட்டது.

1.106.3-
தேவர்களின் இரு தாய்கள் ருதத்தை வலுப்படுத்துகிறார்கள்,

               
மற்ற தேவர்கள் ருதத்தால் தோற்றுவி்க்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் நிலையில் ருதத்தைத் தோற்றுவித்தது யார் என்று இங்கு கூறப்படுகிறது.

5.5.6-
காலையும் இரவும் ருதத்தின் தாய்கள்
என்பதிலிருந்து இரவும் பகலும் மாறி மாறி வருவது தான் பிரபஞ்சத்தின் ஒழுங்கு முறையில் அவர்களுக்கு முதலில் கவனத்துக்கு வந்த விஷயம் என்பது தெரிகிறது.

10.190.1-
தவத்தின் உச்சகட்ட நிலையிலிருந்து ருதமும் ஸத்யமும் தோன்றின. அதிலிருந்து இரவு தோன்றியது. அதிலிருந்து கடல். கடலிலிருந்து வருஷம். இரவு பகலைப் படைத்த தாதா (பிரம்மா) பின் சூரியனையும் சந்திரனையும் பின்னர் பூமி, வானம் இடைவெளி மண்டலம் வெளிச்சம் இவற்றைப் படைத்தார்.

               
இரவு பகல் ஏற்பட்ட பின் சூரியனை பிரம்மா படைத்தார் என்பது நேரடியாகப் பார்த்தால் பொருள் பொருந்தாமல் உள்ளது. எனவே அதன் உட்கருத்து என்ன என்பதை ஆராயவேண்டும்.

               
ரிஷிகள் தவத்தின் (சிந்தனை மற்றும் ஆராய்ச்சியின்) மூலம் ருதத்தையும் ஸத்யத்தையும் அறிந்து கொண்டார்கள். முதலில் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது இரவு. பின்னர் கடல் பற்றி அவர்கள் அறிந்து கொண்டார்கள். பருவகாலங்கள் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் வருவதைப் பார்த்தபின் அவர்களுக்கு வருஷம் என்ற கருத்துரு புரிந்தது. ருதப்படி வரும் பருவகாலங்களுக்கு ருது எனப் பெயரிட்டனர். சூரியன், சந்திரன், பூமி, வானம், இடைவெளி, வெளிச்சம் இவை பற்றிய உண்மைகள் பின்னரே அவர்களுக்குப் புலனாயிற்று.

               
பிரபஞ்சம் படைப்பின் தொடக்க நிலையிலிருந்து கணம் தோறும் மாறிக் கொண்டு வந்திருக்கிறது. இன்னும் மாறிக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கு முன் நடந்த மாற்றங்கள் நம் கவனத்துக்கு வருவதில்லை. நம் வாழ்நாளில் நடைபெறும் மாறுதல்களைப் பார்க்கும்போது நம்முடைய தலைமுறையில் தான் முன்னேற்றமோ பின்னடைவோ மிகுதியாக ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறோம். சில உதாரணங்கள் பார்ப்போம்.

               
தமிழ்நாட்டில் ஐப்பசியில் அடைமழை பெய்வது வழக்கம். இது மாறாத இயற்கை நியதி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஆண்டு மழை பொய்த்து விட்டதாக வைத்துக் கொள்வோம். காலம் கெட்டுவிட்டது. தர்மம் தோற்றுவிட்டது, அதர்மம் வென்றுவிட்டது என்று புலம்புகிறோம். நீண்ட கால வானிலைப் பதிவுகளைப் பார்த்தால் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாதிரி வானம் பொய்த்திருப்பது தெரியவரும். வருடாவருடம் மழை பெய்வது மட்டும் வழக்கமல்ல, இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யாதிருப்பதும் வழக்கம் தான் என்று அறிகிறோம். விதி மட்டும் ருதம் அல்ல, விதிவிலக்குகளும் ருதமே.

               
பாதரசம், உண்டவர் உயிரைக் கொல்லும் இயல்பு உடையது. அதையே சில பச்சிலைச் சாறுகளின் மூலம் புடமிட்டு விட்டால் அது உயிர் காக்கும் மருந்து ஆகிறது. ருதம் தோற்றுவிட்டதா? இல்லை. பாதரசத்தின் விஷத்தை முறிக்கக் கூடிய பச்சிலைகள் பற்றி மனிதன் அறிந்து கொண்டான். அதுவும் இயற்கையால் விதிக்கப் பட்டது தான். இங்கும் ருதமே வெல்கிறது.

               
மேலே விட்டெறிந்த பொருள் கீழே விழுவது மட்டும் தான் இயற்கை நியதி என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். குறிப்பிட்ட வேகத்துக்கும் அதிகமாக ஒரு பொருளை விண்ணில் செலுத்தி, குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அது போகுமானால் அது அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பதை நாம் இன்று அறிந்து கொண்டு விட்டோம். இங்கே மனிதன் இயற்கையை வெல்லவில்லை, ருதத்தின் மற்றொரு பரிமாணத்தை அறிந்து கொண்டான், அவ்வளவு தான்.

               
சில இயற்கை நியதிகளை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அறியாத நியதிகள் பலவுண்டு. இப்பொழுது நாம் அறிந்த ருதத்திற்கு மாறுதலாக ஒரு நிகழ்ச்சி நடக்குமானால் அன்ருதம் வென்று விட்டதோ, ருதம் வலிமையானது என்று இத்தனை நாளும் நம்பி வந்தது பொய்யோ, ருதத்தைக் காக்க வேண்டிய தேவர்கள் அதைக் காக்கத் தவறிவிட்டார்களோ என்று நினைக்கிறோம்.

               
இத்தகைய ஒரு மன நிலையில் தான் வேத முனிவர் பின்வருமாறு கேட்கிறார்.

ரிக் 1.105.
4
வேள்வி நாயகனைக் கேட்கிறேன். தூதனான அவன் சொல்லட்டும். பழைய ருதம் எங்கே? அதை புதிதாக வழங்குவோர் யார்?

5
மூவுலகும் வாழும் தேவர்களே, ருதம் எது? அன்ருதம் எது? என் பழைய கூவல் என்னாயிற்று?

6
ருதத்திற்கு உன் தாங்குதல் எது? வருணனின் கவனிப்பு என்பது என்ன? அர்யமானின் பாதையில் கொடியோரை நாம் எப்படிக் கடப்போம்?

               
ருதம் தோற்பதில்லை, நாம் இதுவரை அறியாத ருதத்தின் பகுதிகள் பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக நாம் அறிய முயலுகிறோம் என்ற ஞானோதயம் முனிவருக்கு பிறக்கிறது. அவரது உள்ளத்தில் ருதத்தின் புதிய பரிமாணம் தோன்றுவதைப் பின் வரும் பாடல் தெரிவிக்கிறது.

15
வருணன் பிரார்த்திக்கிறான். வழிகாட்டுபவனுக்கு எங்கள் பிரார்த்தனை. உள்ளத்தில் உள்ளவன் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறான். புதிய ருதம் தொடங்கட்டும்.

ருதமும் பரிணாம வளர்ச்சியும்

1.152.3- காலில்லாத பெண் காலுள்ள பிராணிகளுக்கு முன் தோன்றினாள். மித்ரனே, வருணனே, உன்னுடைய இந்த வேலையை யார் கவனித்தனர்?
கர்ப்பத்திலுள்ள குழந்தை உலகின் பாரத்தைத் தாங்குகிறது. ருதத்தை நிறைவேற்றுகிறது. அன்ருதத்தை வெல்லுகிறது.

               
டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின்படி காலில்லாத கடல் வாழ் உயிரினங்கள் முதலில் தோன்றின, பின்னரே காலுள்ள பிராணிகள் தோன்றின. இங்கு சொல்லப்படுவது அந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கை தான் என்று கொள்ளலாம். முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம். அதன் பின் பல பல மாற்றங்கள் ஏற்பட்டு புதிய புதிய உயிரினங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. பழைய உயிர் வகைகள் சில அழிந்து விட்டன. சில இன்னும் தொடர்கின்றன. இவை எல்லாமே ஏதோ ஒரு இயற்கை நியதியின்படி தான் நடைபெறுகிறது என்பதை மட்டும் அறிந்த மனித இனம் அதை முழுமையாக அறிந்து கொண்டு விடவேண்டும் என்று காலம் காலமாக முயற்சி செய்து வருகிறது. மனித இனம் உள்ளவரை இந்த முயற்சியும் தொடரும்.

ருதத்தின் முக்கியத்துவம்

                யார் அந்தக் குழந்தை? கண்ணுக்குப் புலனாகாமல் எல்லாப் பொருள்களின் உள்ளுறையாக, கர்ப்பமாக இருந்து எல்லோரையும் ஆட்டிவைக்கும் ருதத்தையே கர்ப்பத்திலுள்ள குழந்தை என்று குறிப்பதாகக் கொள்ளலாம். அதன் ஒழுங்கு முறைக்கு மாறான செயல்களை அது அனுமதிப்பதில்லை.

1.151.4-
நேர்மையானவர்களே, மேலிருந்து வரும் அந்த ருதத்தின் மேலான சக்தியை அறிவியுங்கள். மாட்டை முளையில் கட்டுவது போல ருதத்தை வேலையுடன் இணையுங்கள்.

10.85.1-
உலகைத் தாங்குவது ஸத்யம். ஆகாயத்தை சூரியன் தாங்குகிறது. ஆதித்யர்களை ருதம் தாங்குகிறது. விண்ணை சோமன் தாங்குகிறான்.

1.163.5-
குதிரையைக் கடிவாளம் நெறிப்படுத்தி இலக்கடைந்து வெற்றி பெறச் செய்வது போல மக்களை ருதம் நெறிப்படுத்துகிறது.

7.76.4-
பண்டை முனிவர் ருதத்தை அனுசரித்து தேவர்களுடன் விருந்துண்டனர்.

10.16.11, 10.154.4-
பித்ருக்கள் ருதத்தை முதலில் ஆதரித்தனர்.

1.130.8-
இந்திரன் ருதத்தை மதிக்கும் தன் அடியார்களுக்குப் போரில் உதவி செய்கிறான். மதிக்காதவர்களை அவன் துன்புறுத்துகிறான்.

1.41.4-
தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட ருத வழி முள்ளற்றது.

8.31.13-
ருத வழி நடக்க எளிதானது.

ருதமும் அம்ருதமும்         

      மேற்கண்ட கூற்றுகளிலிருந்து மனிதர்கள் ருதத்தை மதித்து நடக்க வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை என்பதை அறிகிறோம். ருதத்தை அனுசரித்தால் நமக்குக் கிடைப்பது அம்ருதம். அது தான் தேவர்களுடன் உண்ணப்படும் விருந்து. மீறினால் கிடைப்பது தண்டனை.

               
அம்ருதம் என்பது சாகா நிலை தரும் ஒரு பானம் என்று புராணக் கதைகள் சொல்லுகின்றன. இயற்கை நியதிகளை இன்று நாம் அறிந்துள்ளபடி சாகா நிலை என்பது சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது. எனவே அவர்கள் குறிப்பிட்ட அமர நிலை என்பது வேறு பொருளைக் குறிப்பதாக இருக்கலாம்.

கொன்றழிக்கும் கவலையினை சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கை தனை அழித்து விட்டால்
அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்

என்று பாரதி கூறுவதிலிருந்து அம்ருதம் என்பது ருதத்தை அனுசரிப்பதால் நமக்குக் கிடைக்கும் ஒரு ஆனந்தமான மன நிலையே என்பதை அறிகிறோம். இந்த நிலையில் கவலை, சினம், பொய், அச்சம், வேட்கை அழிந்து போகின்றன, காலம் பற்றிய உணர்வு மறைகிறது.

               
ஜே.கிருஷ்ணமூர்த்தியும் தியானத்தின் மூலம் அடையப்படும் காலம் கடந்த நிலை பற்றிக் கூறுகிறார்.

1.25.1
ருதத்தை மீறியவரை வருணன் யமனுக்கு இரையாக்குகிறான்

1.51.8
ருதத்தை மீறியவரை இந்திரன் தண்டிக்கிறான்.

எனப்படுவதால் சிற்றறிவுடைய பறவைகள், உயிரற்ற கப்பல்கள் முதற் கொண்டு ருதத்தை அனுசரித்து நடக்கும்போது மனிதன் மட்டும் சில சமயங்களில் ருதத்தை மீறுகிறான் என்பதும் தெரிகிறது.

ருதத்தை அனுசரித்து நடத்தல் என்றால் என்ன?

               
தவம் செய்து ருதத்தை அறிய வேண்டும், அதாவது, இயற்கையை உற்றுநோக்கி அதில் ஒரு ருதம் (ஒழுங்கு முறை) நிலவுவதை உணர்தல் வேண்டும். அத்துடன் நில்லாது, இந்த ஒழுங்கு முறையை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் ஸத்யம் ஒன்று உண்டு என்பதையும் உணர்தல் வேண்டும். இவ்வாறு ருதத்திலும் ஸத்யத்திலும் மனதை ஈடுபடுத்துதல் தான் ருதத்தை அனுசரித்தல் என்று சொல்லப்பட்டிருக்கிறது..

               
ஆனால் அவன் மனம் என்ற ஒன்றைப் பெற்றிருப்பதால் ஆணவம் உடையவன் ஆக இருக்கிறான். அதன் காரணமாக தன் அறிவினால் எதையும் சாதிக்க முடியும், இயற்கையை வென்றுவிட முடியும் என்ற தருக்கு ஏற்படுகிறது. சில வேலைகளில் அவன் வெற்றி பெறுகிறான். சில சமயங்களில், அவன் எவ்வளவு திட்டமிட்டிருந்தாலும், எதிர்பாராதபடி தோல்வி அடைந்து துயரப்படுகிறான். அந்தத் தோல்விக்கு அவனுடைய அறிவினால் காரணம் சொல்ல முடிவதில்லை. தன்னால் வெல்ல முடியாத, புரிந்து கொள்ளக் கூட முடியாத அந்த இயற்கை நியதிக்குத் தலைவிதி அல்லது ஊழ் என்று பெயரிட மட்டுமே முடிகிறது.

               
இனி ரிக் வேதத்தில் ஸத்யம் எவ்வாறு ஆளப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

ஸத்யம் = உண்மை
               
               
சில இடங்களில் ஸத்யம் இன்று நாம் வழங்கி வரும் முறைப்படி உண்மை என்ற பொருளில் வருகிறது.

1.108.1
என்னுடைய ஸத்யமான சிரத்தையை மதித்து நீ வந்தாய்
1.127.8
அக்னி ஸத்யமான பிரார்த்தனைகளை ஏற்கிறார்
2.15.1
இந்திரனின் ஸத்யமான புகழ்களைச் சொல்லுகிறேன்.
3.54.4
ஸத்யமான வார்த்தை பேசும் முனிவர்கள் உன்னை அறிய முடிந்தது
6.30.4
இந்திரா உன்னைப் போல் ஒருவருமில்லை இது ஸத்யம்

               
பல இடங்களில் மேலும் விரிவான பொருளில் ஸத்யம் என்ற சொல் ஆளப்பட்டிருக்கிறது.

தேவர்கள் ஸத்ய வடிவினர்கள்.

1.1.5, 1.1.6, 1.12.7
நீயே ஸத்யம் என்று அக்னி போற்றப்படுகிறான். அவன் அளிக்கும் ஆசியும் ஸத்யம். அவனுடைய வழிகளும் ஸத்யமானவை.
6.51.10, 8.59.5
வருணனும் இந்திரனும் மித்ரனும் அதே போலப் போற்றப்படுகிறார்கள்.
8.61.4
இந்திரன் ஸத்யத்தில் மாறுதலின்றி நிற்கிறான்.

ஸத்யம் = பரம்பொருள்

               
இந்திரன் ஸத்யத்திலிருந்து தோன்றியவன் என்று 4.19.2 உம் ருதத்திலிருந்து தோன்றியவன் என்று 8.6.2 உம் கூறுவதால் ருதமும் ஸத்யமும் ஒரே பொருளை, அதாவது பரம்பொருளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

               
தேவர்களை ஸத்யத்தின் வடிவினராகப் பேசிய வேதம், பெயர்கள் பலவானாலும் பரம்பொருள் ஒன்று தான் என்ற அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

1.164.46 –
இந்த்ரம் மித்ரம் வருணம் அக்னிம் ஆஹுரதோ திவ்யம் ஸ ஸுபர்ணோ கருத்மான்.
ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி அக்னிம் யமம் மாதரிஸ்வானமாஹு:

               
உள்ளது ஒன்று, அதை இந்திரன், மித்ரன், வருணன், அக்னி, கருத்மான், யமன், மாதரிஸ்வான் என்று அறிஞர்கள் பலவிதமாகப் பேசுகிறார்கள் என்று கடவுளைக் குறித்து எல்லா மதக்காரர்களும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு கருத்தைக் கூறுகிறது. இது தான் வேதத்தின் திரண்ட சாரம் என்று கொள்ளலாம். இந்து சமயம் பிற்காலத்தில் பல பல தெய்வங்களை ஏற்படுத்தி வளர்ந்ததற்கும், பிற சமயங்களைப் பகைக்காமல் அரவணைத்து மதிப்புடன் நடத்தியதற்கும் அடிப்படையான போதனை இதுவே.

ஸத்யம் தோற்பதில்லை

               
ஸத்யம் ஏவ ஜயதே ந அன்ருதம் என்ற உபநிடத வாக்கியம் ஒன்று உண்டு. வாய்மையே வெல்லும், பொய் அல்லஎன்று இதை மொழிபெயர்த்து, கடைசியில் என்றோ ஒரு நாள் ஸத்யம் வெல்லப்போகிறது என நாம் கருதுகிறோம். அது சரியான பொருள் அல்ல.

               
ஸத்யம் என்பது ஸத் என்ற சொல்லிலிருந்து தோன்றியது. அதற்கு உள்ளது என்று பொருள். எது உள்ளதோ அது ஸத்யம். தமிழில் உண்மை என்ற சொல்லும் உள்ளது என்ற சொல்லிலிருந்து தோன்றியது. உள்ளது, இருக்கிறது ஆகிய இரு சொற்களும் ஒரே பொருளை உடையவை ஆயினும் உள்ளது என்ற சொல்லுக்கு மட்டும் இறந்த காலமும் வருங்காலமும் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் வினையாகும். ஜயதே என்ற சொல் எதிர்காலத்தைக் குறிப்பது அல்ல. வெல்கிறது என்ற பொருள் உடைய அது முக்காலத்துக்கும் பொருத்தமான நிரந்தர உண்மையைக் கூறுவது.

               
ஸத்யம் தான் வெல்கிறது, அன்ருதம் அல்ல. அதாவது ஸத்யம் ஆகிய பரம்பொருள் தான் முக்காலத்திலும் வென்று நிலை பெற்று இருக்கிறது. இயற்கை விதிக்கு முரணானது வெல்வது இல்லை என்பது தான் சரியான பொருள்.

சூரியனும் ஸத்யமும்

               
பல தேவர்கள் ஸத்ய வடிவினராகப் போற்றப்பட்டாலும் சூரியனுக்கும் ஸத்யத்துக்கும் உள்ள தொடர்பு சிறப்பானது. தேவஎன்ற அடைமொழி மற்றவர்களை விட ஸவிதாவுக்குத் தான் மிக அதிகமாகக் கொடுக்கப் பட்டிருப்பதை முன்னர்க் கண்டோம்.

10.55.6
வசிக்க வீடு இல்லாத சிவந்த பறவை (எங்கும் நிலைத்து இராமல் சுற்றிக் கொண்டே இருப்பதால் சூரியன் அவ்வாறு கூறப்படுகிறான்) வலிமையானவன். அவன் அறிந்ததெல்லாம் ஸத்யம். அது தோற்பதில்லை.

               
சூரியனுடைய தேருக்கு இரண்டு சக்கரங்கள் உள்ளன. ஒன்று ருதம் மற்றது ஸத்யம். சாதாரண மக்களுக்கு முதல் சக்கரம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறது. ருதத்தை நன்றாக அறிந்த முனிவர்கள் மட்டுமே அவனுடைய இரண்டாவது சக்கரமான ஸத்யத்தைக் காண முடிகிறது.

ருதத்தின் மூலம் தான் ஸத்யம்

10.85.16
ருதத்தை அறிந்தவர்கள் தான் சூரியனின் அந்த மறைந்த சக்கரத்தைக் காண முடியும்.

               
ருதத்தின் மூலமாகத் தான் ஸத்யத்தை அறியமுடியும் என்ற கருத்தை
4.51.7
ஸத்யத்திற்குப் பிறப்பிடம் ருதம் என்று தெரிவிக்கிறது. இதை மற்றொரு பாடல் நேரடியாகவே கூறுகிறது.

7.56.12
ருதத்தை அனுசரிப்பவர்கள் ருதத்தின் மூலமாகவே ஸத்யத்தை அடைந்தனர்.

10.36.13
சூரியனை ஸத்யத்தின் தந்தையாகக் கூறுகிறது. இதை முன் கூறிய 4.51.7 மற்றும் 7.66.10க்கு முரண்படாத வகையில் சூரியன் மூலமாகத் தான் ஸத்யத்தை அறிந்தனர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அன்ருதமும் அஸத்யமும்

               
ருதம் என்பதற்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்பதை வேதம் கூறுகிறது. இயற்கை நியதிகளுக்கு மாறாக ஒருவன் பேசினாலோ, நடந்தாலோ அது அன்ருதம். இதைத் தேவர்கள் தண்டிக்கின்றனர் என்கிறது வேதம்.

               
ஸத்யம் என்பது பரம்பொருளைக் குறிப்பது ஆதலால் அஸத்யம் என்பது பரம்பொருள் இல்லை என்று பொருள் ஆகிறது. அவ்வாறு எவரும் சொல்லார். பல வேறு மதக்காரர்களும் வெவ்வேறு பெயரிட்டு அழைப்பர். நாத்திகர்கள் வணக்கம் அவசியமில்லை என்பரே அன்றி ஏதோ ஒரு இயற்கை நியதி உள்ளது என்பதை மறுக்கார். இல்லை என்று சொல்ல எவராலும் முடியாது. அதனால் ஸத்யம் என்பதற்கு எதிர்ச் சொல்லான அஸத்யம் என்ற சொல் வேதத்தில் ஒரு இடத்திலும் காணப்படவில்லை. ஸத்யமேவ ஜயதே ந அன்ருதம் என்ற உபநிடத வாக்கியத்தை முன்பு பார்த்தோம்.

               
பிரபலமான ஒரு சுலோகம் பல இடங்களிலும் காணப்படுகிறது. மூலம் மகாபாரதத்தில் உள்ளதாகத் தோன்றுகிறது. ஸத்யம் பேசுக, பிரியமானதைப் பேசுக. ஸத்யமாயினும் பிரியமல்லாததைப் பேசாதே. பிரியமானதாக இருப்பினும் அன்ருதம் பேசாதே என்கிறது. இங்கும் ஸத்யத்துக்கு எதிர்ச்சொல்லாக அன்ருதம் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

               
வேதத்தில் எல்லாக் கருத்துகளும் உருவகமாகவே கூறப்பட்டுள்ளன என்பதை இது வரை பார்த்த உதாரணங்களிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அதனால் தான் அது மறை எனப்படுகிறது. நனைத்தல் என்பதற்கு கலத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

               
இயற்கைப் பொருள்களை உற்றுநோக்கு, அவற்றில் ஒரு ருதம் (ஒழுங்கு முறை) நிலவுவதைக் கவனி, இந்த ஒழுங்குமுறையை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் ஸத்யம் (பரம்பொருள்) ஒன்று உண்டு என்பதையும் கவனி என்ற கருத்தை வேதம், ருதத்தை ஸத்யத்தால் நனை, ஸத்யத்தை ருதத்தால் நனை, அதாவது இரண்டையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்து என்கிறது.

               
ருதத்தின் திறமையைப் பார்த்து வியக்கிறோம். ஸத்யத்தின் மௌனத்தில் நம்மை ஆட்படுத்திப் பணிகிறோம். நாம் ஒவ்வொரு வேளை சாப்பிடும்போதும் இறைவனையும் இறைவியையும் சேர்த்து நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நம் முன்னோர் இதை உணவு மந்திரமாக அமைத்தனர் போலும்.